Logo

அடுத்த ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடையாது!

நோபல் பரிசு தேர்வுக் குழுவுக்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
 | 

இது குறித்து கருத்து தெரிவித்த நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன், "தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை", என்று தெரிவித்துள்ளார். 

உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த பரிசை அறிவிக்கும் ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்தது.

இதன் காரணமாக இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக இலக்கிய படைப்புகளுக்கான நோபல் பரிசு தேர்வுக் குழுவிலிருந்த உறுப்பினர்கள் பலர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினர். 

இந்நிலையில், 2018-ம் ஆண்டு மட்டுமின்றி 2019-ம் ஆண்டும் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP