Logo

ஜப்பானின் 126வது மன்னராக நருஹிட்டோ பதவியேற்றார்

ஜப்பானின் 125வது மன்னர் அகிஹிட்டோ, வயது மூப்பு மற்றும் உடல் குறைவால் தனது பதவியை விட்டு விலகினார். இதையடுத்து அவரது மூத்த மகனான நருஹிட்டோ ஜப்பானின் 126வது மன்னராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
 | 

ஜப்பானின் 126வது மன்னராக நருஹிட்டோ பதவியேற்றார்

ஜப்பானின் 125வது மன்னர் அகிஹிட்டோ வயது மூப்பு மற்றும் உடல் நல குறைவால் தனது பதவியை விட்டு விலகினார். இதையடுத்து அவரது மூத்த மகனான நருஹிட்டோ ஜப்பானின் 126வது மன்னராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கான பாரம்பரிய சடங்குகள்,  நேற்று தொடங்கியது. இந்த சடங்கு முறைகளில், மன்னர் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றாலும் கூட, இதைப் பற்றிய செய்திகளை அறிவதற்காக நேற்று டோக்கியோவில்  உள்ள அரண்மனை முன்பு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில், இன்று டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில், 126-வது ஜப்பான் மன்னராக புதிய மன்னராக அகிஹிட்டோ மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ சம்பிரதாயப்படி  பதவியேற்றார். 

ஜப்பானில் கடந்த, 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியது  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மன்னர் குடும்பத்துக்கு அரசியலில் எந்த செல்வாக்கும் இல்லாத போதிலும் இது அந்நாட்டின் கவுரமாக கருதப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP