நியுசிலாந்து விமான நிலையத்தில் மர்ம பொருளால் பரபரப்பு

சந்தேகத்திற்கிடமான மர்மப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு புரளியால் நியுசிலாந்தின் டூன்டென் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
 | 

வெடிகுண்டு நிபுணர்கள் சந்தேகத்திற்கிடமான பையை சோதனையிட்டனர். கேட்பாரற்று கிடந்த மர்ம பையை பாதுகாப்பாக எடுத்த வெடிகுண்டு நிபுணர்கள் அதனை செயலிழக்க செய்தனர். அது வெடிகுண்டுதானா என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை.

ஆனால் விமான நிலையத்தில் இருந்ததாக உறுதி செய்துள்ளனர். இதனால் சில மணி நேரம் விமானப் போக்குவரத்து தடைபட்டது. பின்னர் தீவிரமான சோதனைக்குப் பிறகு மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP