கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு!

கியூபா நாட்டின் புதியஅதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலமாக காஸ்ட்ரோ குடும்பத்தைச் சாராத ஒருவர் கியூபா நாட்டின் அதிபராகிறார்.
 | 

கியூபா புரட்சியை முன்னெடுத்த ஃபிடல் காஸ்ட்ரோ சுமார் 30 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக பதவி வகித்தார். கடந்த 2006ம் ஆண்டு தனது சகோதரர் ரால் காஸ்ட்ரோவை அதிபராக்கினார். தற்போது வரை அதிபராக இருந்து வந்த ரால் காஸ்ட்ரோ சமீபத்தில் பதவி விலகினார். இதனால் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் 605 பேரும் இணைந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இரண்டு நாட்கள்(ஏப்ரல் 18, 19) சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.

அதன்படி, ரால் காஸ்ட்ரோ தனது ஆதரவாளரான மிக்வெல் டயாஸை அதிபர் பதவிக்கு நிறுத்தினார். இதையடுத்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக மிக்வெல் டயாஸை தேர்வு செய்தனர். 

இதன் மூலமாக கியூபா விடுதலைக்குப் பின் முதல் முறையாக காஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராத ஒருவர்   நாட்டின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டு உள்ளார். மிக்வெல் டயாஸ் 2013ம் ஆண்டு முதல் கியூபா நாட்டின் துணை அதிபராக பதவி வகித்தவர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP