மெக்சிகோ எண்ணெய் குழாய் விபத்து: பலி எண்ணிக்கை 100யைத் தாண்டியது!

மெக்சிகோ நாட்டில் எண்ணெய் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 100யைத் தாண்டியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
 | 

மத்திய மெக்சிகோவில் உள்ள ஹிடல்கோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயில் எண்ணையை திருடும் நோக்கத்தில் சிலர் குழாயை உடைத்ததாக தெரிகிறது. இதையடுத்து குழாயின் ஒரு பகுதியில் கசிந்து வந்த எண்ணெயை எடுத்துச் செல்ல, பொதுமக்கள் அந்த இடத்தில் கூடியிருந்த போது, திடீரென தீ பற்றி எண்ணெய் குழாய் வெடித்தது. இதில் முதற்கட்டமாக 20 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. 

மெக்சிகோ எண்ணெய் குழாய் விபத்து: பலி எண்ணிக்கை 100யைத் தாண்டியது!

மேலும், பலர் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 100யைத் தாண்டியுள்ளது. மேலும், 50க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP