கிம் ஜாங் உன் ரஷ்யா பயணம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவிற்கு அரசுமுறை பயணம் செய்யவிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இந்தப் பயணத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 | 

வடகொரியாவுக்கும் ரஷ்யாவிற்குமான உறவு நூற்றாண்டு பழமையானது ஆகும். வடகொரியாவின் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் II சூங்கின் சிலை அந்நாட்டின் தலைநகரான பியோங்யாங்கில் உள்ளது. இந்த சிலைக்கு கீழ் சோவியத்தின் கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பானுக்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து போராடியதை குறிக்கிறது.

இந்நிலையில் பழைய நட்பை புதுப்பித்துக் கொள்வதற்காக கிம், ரஷ்யா செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சிங்கப்பூரிலும், வியட்நாமிலும் சந்தித்து பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இவ்விரு சந்திப்புகளும் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனெனில், இவ்விரு தலைவர்களும் இந்தச் சந்திப்புகளுக்கு முன்பாக கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP