ஜூன்.15, 2018 - உலக செய்திகள்

உலகெங்கிலும் நடந்த முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பதிவை பின்தொடருங்கள்...
 | 

ஜூன்.15, 2018 - உலக செய்திகள்

மாலத்தீவு முன்னாள் அதிபர், தலைமை நீதிபதிக்கு சிறைத்தண்டனை: இந்தியா கடும் அதிருப்தி

மாலத்தீவின் தற்போதைய அதிபர் அப்துல்லா யமீன் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தினார். இந்நிலையில், நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயூம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத் இருவருக்கும் தலா 19 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த நடவடிக்கை மாலத்தீவில் நடைபெறும் சட்டத்தின் ஆட்சி மீதும், நடைபெற உள்ள அதிபர் தேர்தல் மீதான நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

ஜூன்.15, 2018 - உலக செய்திகள்

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் பாக் தலிபான் தலைவன் பலி

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் பாகிஸ்தான் தலைவன் முல்லா பாஸல் உல்லா கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜூன்.15, 2018 - உலக செய்திகள்

ட்ரம்ப் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லவுள்ளார் கிம்

சிங்கபூர் சந்திப்பின் போது,  கிம் ஜாங் உன்னை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப்,  அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல கிம் ஜாங் உன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன்.15, 2018 - உலக செய்திகள்

குழந்தைகளை வளர்க்க தந்தைக்கு விடுமுறை அளிக்க இந்தியா மறுப்பு - யுனிசெப் தகவல்

அரசு அலுவலங்களில் பணியாற்றும் கர்ப்பிணிகளுக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுவதுபோல குழந்தைகளை வளர்க்க தந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த நிலையில் ஐ.நா. சபையின் குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான யுனிசெப் அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா உள்பட 90 நாடுகள் புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க அதன் தந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுவதில்லை என கண்டறிந்துள்ளது. 

ஜூன்.15, 2018 - உலக செய்திகள்

அமெரிக்காவால் உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து : ஐ.எம்.எஃப்.

உள்நாட்டு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில், இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கு, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கையால், உலக பொருளாதாரமே ஆபத்தை நோக்கி பயணிப்பதாக, சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில், எதிர்பார்த்தபடியே இருப்பதாகவும், வரும் ஆண்டிலும் அது தொடர வாய்ப்புள்ளதாக கூறியுள்ள ஐ.எம்.எஃப், அமெரிக்காவின் நிதி மற்றும் வர்த்தக கொள்கைகளால், 2020ஆம் ஆண்டில் இருந்து உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஜூன்.15, 2018 - உலக செய்திகள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP