இஸ்ரேல் மீது குண்டு வீச்சு- பாலஸ்தீனியர்கள் 4 பேர் பலி

காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு பெண், ஒரு குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

இஸ்ரேல் மீது குண்டு வீச்சு- பாலஸ்தீனியர்கள் 4 பேர் பலி

காசா எல்லை அருகிலிருந்து இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீன தீவிரவாதிகள் இன்று ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு பெண், ஒரு குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனம் அருகாமையில் உள்ள இஸ்ரேல் நாட்டின் காசா எல்லைப்பகுதி அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் மீது சுமார் 250 ராக்கெட்டுகளை வீசி பாலஸ்தீன தீவிரவாதிகள் சரமாரியான தாக்குதல் நடத்தியுள்ளனர். 

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காசா முனையில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது இங்குள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக காசா நகரின்மீது இஸ்ரேல் நாட்டு போர் விமானங்களும் குண்டுமழை பொழிந்து துவம்சம் செய்து விடும். இது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அவ்வகையில், காசா முனையில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் சுமார் 250 ராக்கெட்டுகளை ஏவி மிகப்பெரிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் பாலஸ்தீனம் மீது நடத்தப்பட்ட பதில் நடவடிக்கை குறித்து இஸ்ரேல் குறிப்பாக எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP