இஸ்ரேல்: 4 பாலஸ்தீனியர்கள் பலி!

இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இஸ்ரேலிய வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
 | 

இஸ்ரேல்: 4 பாலஸ்தீனியர்கள் பலி!

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ்-இல் அமைக்கப்பட்டிருந்து தங்களின் தூதரகத்தை அமெரிக்கா கடந்த ஆண்டு பழம்பெருமை வாய்ந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று மதத்தவரும் புனிதத் தலமாக கருதி வரும் ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது

அதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அதன் ஓர் அம்சமாக பாலஸ்தீனர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக, பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மற்றும் காசா எல்லைப் பகுதிகளில் ஒன்று கூடினர். அதையடுத்து, அங்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெரும் எண்ணிக்கையில் இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டன.

 அங்கு ஒன்று கூடியிருந்த பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கற்களை வீசியும் பெட்ரோல் குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து வன்முறையாளர்களைக்  கட்டுப்படுத்த, இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், நான்கு பாலஸ்தீனர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP