நாங்களும் உதைக்க வேண்டி வரும்... பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை!

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், இந்தியாவை போன்று தாங்களும் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என்று பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

நாங்களும் உதைக்க வேண்டி வரும்... பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை!

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், இந்தியாவை போன்று தாங்களும் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என்று பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் தென்கிழக்குப் பகுதியில், கடந்த மாதம் 13 -ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், பாதுகாப்புப் படையினர் 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். 

பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் - அல் -அடல் என்று தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. 
இந்த நிலையில்,  தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஈரானின் ராணுவ அதிகாரிகள் கூறியது:
இந்தியா, ஈரான் என தமது எல்லையை ஒட்டுயுள்ள எல்லா நாடுகளுக்கும்  பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு தீவிரவாத அமைப்புகளால் எப்போதும் அச்சுறுத்தல் உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நினைத்தால் ஒரே நிமிடத்தில் குண்டு போட்டு, அனைத்து தீவிரவாதிகளையும் ஒழித்துவிடலாம்.

ஆனால் இதற்கு மாறாக, அந்த நாட்டு ராணுவமும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும், தங்களின் சுயநலத்துக்காக தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகின்றன. 

இந்தப் போக்கை பாகிஸ்தான் மாற்றிக் கொள்ளாவிட்டால், தீவிரவாதத்தை வளர்த்து வருவதற்காக, அந்த நாடு அதிக விலையை தர வேண்டியிருக்கும்.

தீவிரவாதிகள் முகாம்களின் மீது இந்திய ராணுவம் அண்மையில் அதிரடி தாக்குதல் நடத்தியதைப் போன்று, ஈரானும் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP