இந்தோனேசியா: தப்பிச் சென்ற 36 கைதிகள் மீண்டும் கைது; 77  பேரை தேடும் பணி தீவிரம்

இந்தோனேசியா பன்டா அசே பகுதியில் உள்ள மத்திய சிறையில் இருந்து கடந்த 29ஆம் தேதி தப்பிச் சென்றவர்களில் 36 கைதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் இன்னும் 77 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 | 

இந்தோனேசியா: தப்பிச் சென்ற 36 கைதிகள் மீண்டும் கைது; 77  பேரை தேடும் பணி தீவிரம்

இந்தோனேசியா மத்திய சிறையில் இருந்து தப்பிச் சென்றவர்களில் 36 கைதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் இன்னும் 77 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்தோனேசியா நாட்டின் பன்டா அசே பகுதியில் உள்ள மத்திய சிறையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி 113 கைதிகள் தப்பியோடினர்.  726 கைதிகள் கூட்டுத் தொழுகைக்காக திறந்து விடப்பட்டபோது, இந்த சந்தர்பத்தை சாதகமாக்கி, சிறையின் கம்பி வேலியை வெட்டி கைதிகள் தப்பிச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்ததன.  தப்பியோடிய கைதிகள் பிடிப்பதற்காக நாடு முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தப்பிச்சென்ற கைதிகளில்  36 பேரை இதுவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 77 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கைதிகளும் விரைவில் பிடிபடுவார்கள் என அசே மாகாண காவல்துறை செய்தி தொடர்பாளர் எரி அப்ரியோனோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP