ட்ரம்ப் கார் முன்பு செல்ஃபி எடுக்க 40,000 செலவழித்த இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சென்ற கார் முன்னால் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக மலேசிய வாழ் இந்திய வம்சாவளி இளைஞர் ரூ.38,000 செலவழித்துள்ளார்.
 | 

ட்ரம்ப் கார் முன்பு செல்ஃபி எடுக்க 40,000 செலவழித்த இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்ம்ப் சென்ற கார் முன்னால் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக மலேசிய வாழ் இந்திய வம்சாவளி இளைஞர் ரூ.38,000 செலவழித்துள்ளார். 

சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் சந்திப்பு நடைபெற்றது. உலகமே எதிர்பார்த்திருந்த இந்த சந்திப்பை பலர் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் கண்டுகளித்தனர். 

இந்த நிலையில், மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் மோகன் என்பவர் ட்ரம்ப் மற்றும் கிம்மை காண சிங்கப்பூர் சென்றார். அங்கு ட்ரம்ப் பயணிக்கும் வழியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்தும் தங்கினார். அங்கு ஒரு நாள் தங்குவதற்காக 38,000 ரூபாய் அவர் கட்டணம் செலுத்தியுள்ளார். இதன் மூலம் ட்ரம்ப் அந்த வழியில் செல்லும்போது செல்ஃபி எடுப்பது தான் இவரது நோக்கம். ட்ரம்ப் சென்டோசா செல்லும் வாகனம் செல்லும் வழியில் அவரது கார் சென்ற போது, அதன் முன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளார். 

சிங்கப்பூர் உச்சி மாநாட்டின் போது சிங்கப்பூரில் கடுமையான பாதுகாப்பு கெடுபிடி இருந்தது. செண்டோசா வழியில் அனைத்து விடுதிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP