ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவனின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்!

ஆஸ்திரேலியாவில் செல்ஃபி எடுக்க முயன்றபோது மலை உச்சியில் இருந்து கடலுக்குள் விழுந்த இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 | 

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவனின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்!

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவனின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்!ஆஸ்திரேலியாவில் செல்ஃபி எடுக்க முயன்றபோது மலை உச்சியில் இருந்து கடலுக்குள் விழுந்த இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில், துறைமுக நகரான அல்பானிக்கு அருகே தி கேப் என்ற 40 மீட்டர் உயரம் கொண்ட சிறிய மலை உள்ளது. இது ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இதன் மேற்பகுதி மிகவும் செங்குத்தானது.

இங்கு சில தினங்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த, அங்கித் (20) என்ற மாணவன், தனது நண்பர்களுடன் சென்றார். அங்குள்ள கடல் பகுதியில், 100 அடி உயர செங்குத்து பாறையின் மீது ஏறிய அங்கித், செல்ஃபி எடுக்க முயன்றபோது, கால் தவறி, கடலுக்குள் விழுந்தார். மாணவரை மீட்க அவரது நண்பர்கள் முயன்றனர். ஆனால், அருகில் இருந்தவர்கள் தடுத்து, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின், அங்கித்தை இறந்த நிலையில் மீட்டனர்.

மாணவன் அங்கித், எச்சரிக்கையை மீறி செங்குத்து பாறையின் மீது ஏறி, செல்ஃபி எடுக்க முயன்றபோது, கடலில் விழுந்து இறந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனின் பெற்றோரை தொடர்புகொள்ள ஆஸ்திரேலிய போலீசார் முயற்சித்து வருவதாகவும் ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP