தீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்

நியூஸிலாந்தில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்ட நிலையில், தீவிரவாதியின் பெயரை உச்சரிக்கப் போவதில்லை என்று நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
 | 

தீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்

நியூஸிலாந்தில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்ட நிலையில், தீவிரவாதியின் பெயரை உச்சரிக்கப் போவதில்லை என்று நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

கடந்த வெள்ளியன்று, நியஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெள்ளி தொழுகைக்காக மசூதிக்கு சென்றிருந்த 50 இஸ்லாமியர்கள் இந்த தாக்குதலில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த குற்றவாளி, போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது ஒரு இனவெறி தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டது. சம்பவத்திற்கு முன், தீவிரவாதி, ஒரு நீண்ட இஸ்லாமிய வெறுப்பு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டார். மேலும், துப்பாக்கிச் சூட்டை படம் பிடித்து இணையதளத்திலும் நேரலையில் ஒளிபரப்பினார். 

இந்த நிலையில், தாக்குதல் குறித்து பேசிய நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தீவிரவாதியின் பெயரை குறிப்பிட மறுத்துவிட்டார். தீவிரவாதி என்பதை தவிர அவருக்கு வேறு எந்த அடையாளமும் கொடுக்க வேண்டாமென்றும் அவர் அனைவர்க்கும் கோரிக்கை வைத்தார். "இறந்தவர்களின் பெயரை மட்டும் சொல்லுங்கள். அவர்களை நம்மிடம் இருந்து பிரித்த தீவிரவாதியின் பெயரை சொல்லாதீர்கள். நான் அவரது பெயரை சொல்ல மாட்டேன். அவர் ஒரு தீவிரவாதி, குற்றவாளி, பயங்கரவாதி. ஆனால், நான் பேசும்போது அவரது பெயரை சொல்லமாட்டேன்" என்று கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP