தன்னுடைய குடும்பத்திற்காக போக்குவரத்தை சரி செய்யும் கொரில்லா!

சில்வர் கலர் முதுகு கொண்ட கொரில்லா ஒன்று தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பாக சாலை கடக்க செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
 | 

தன்னுடைய குடும்பத்திற்காக போக்குவரத்தை சரி செய்யும் கொரில்லா!

சில்வர் கலர் முதுகு கொண்ட கொரில்லா ஒன்று தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பாக சாலை கடக்க செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

பல நாடுகளில் மனிதர்களே போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பல விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். ஆனால் 5 அறிவு கொண்ட  மிருகங்களும்,  பறவைகளும் போக்குவரத்து சிக்னலை கவனித்து பின்னர் சாலையை கடக்கும் வீடியோக்களையும் , செய்திகளையும் நாம் அன்றாடும் பார்த்து கொண்டே தான் இருக்கின்றோம் .  இந்த மாதிரியான விசித்திர சம்பவங்களை பெரும் நகரங்களில் மனிதர்களுடன் பழகும் மிருகங்கள், பறவைகள் செய்து பார்த்திருப்போம் . 

ஆனால் இந்த வீடியோவில் அடர்ந்த காட்டிற்குள் வாழும் கொரில்லாக் கூட்டம் காட்டின் நடுவில் அமைந்துள்ள சாலையை கடந்து மறு  புறம் உள்ள பகுதிக்கு  செல்ல முயற்சிக்கின்றன.  அப்போது அந்த கூட்டத்தின்  தலைவன் சாலையின் நடுவில் நின்று, எதிர் வரும் வாகனங்களுக்கு தெரியும் வகையில் தன்னுடைய சில்வர் கலர் முதுகை நிமிர்த்தி நிற்கிறது. அதன் பிறகு மற்ற கொரில்லாக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையை கடக்கும் அபூர்வக்  காட்சிகள் இடம் பெற்று பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. 

 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP