குடியேறிகளுக்கு 'மன்னிப்பு காலம்' - அமீரகம் அசத்தல் முடிவு!

விசா காலம் முடிந்த பின்னும், சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு, 3 மாதங்களுக்கு பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது.
 | 

குடியேறிகளுக்கு 'மன்னிப்பு காலம்' - அமீரகம் அசத்தல் முடிவு!

விசா காலம் முடிந்த பின்னும், சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு, 3 மாதங்களுக்கு பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் மேற்கத்திய நாடுகள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் இருந்து மட்டும் 28 லட்சம் பேர் இங்கு பணியாற்றுகின்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் விசா காலம் முடிந்தும் சட்ட விரோதமாக அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். 

அந்நாட்டு சட்டப்படி, இவர்கள் போலீஸிடம் சிக்கினால் பல லட்சம் ரூபாய் அபராதமும் சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும். அதன் பின்னர் அவர்கள் அந்த நாட்டுக்குள் நுழைய முடியாது. 

இந்த நிலையில், சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மூன்று மாதங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு அபராதம் சிறை போன்ற தண்டனைகள் விதிக்கப்படாது. 

மேலும், அந்த நாட்டிலேயே வேறு வேலை தேடிக் கொள்ள அவர்களுக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமேரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் குடியேறிகள் சட்டத்தில் நெருக்கடியான மாற்றங்களையும் விசா பெறுபவர்களுக்கு அதிகப்படியான விதிமுறைகளையும் இயற்றி வரும் நிலையில் அமீரகத்தின் இத்தகைய முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

கேரள தொழிலாளியின் உடல் மீட்பு:  கேரள மாநிலத்தைச் சேர்ந்த மொய்தீன் அபுதாபியில் பணியாற்றி வந்தார்.  இவர் வேலை பார்த்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதை தொடர்ந்து, இவரது, விசா காலாவதி ஆனது. இதையடுத்து, அங்கு சட்ட விரோதமாக தங்கி சிறு சிறு வேலைகள் பார்த்து வந்தார். இந்த நிலையில், 2 மாதங்களாக அவரை உறவினர்கள் யாரும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இந்த நிலையில் அவரது உடலை கடலிலிருந்து அபுதாபி போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP