நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 50 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான கானாவில் நேற்று இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒரு பேருந்து தீ பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 50 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

ஆப்பிரிக்க நாடான கானாவின் பேருந்துகள் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அம்போமா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. அந்நாட்டிலேயே மிகப்பெரிய பேருந்து நிறுவனமாக கருதப்படும் விவிஐபி பேருந்து நிறுவனத்தின் ஒரு பேருந்தும் இந்த விபத்தில் சிக்கியதாக தெரிகிறது.

மோதியதை தொடர்ந்து, ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 50 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.  பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP