துருக்கியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவுகோளில் 6.4ஆக பதிவு

வடக்கு துருக்கியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவானது.
 | 

துருக்கியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவுகோளில் 6.4ஆக பதிவு

துருக்கி நாட்டின் வடக்கு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும் ஒரு சில இடங்களில் கட்டங்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டதாகவும் அந்நாட்டு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் அருகில் உள்ள பல்கேரியா மற்றும் துருக்கி நாட்டின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டதாக  புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கிரீஸ் நாட்டில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது பல்கேரியா மற்றும் துருக்கியின் வட பகுதியில் நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP