Logo

உக்ரைன் அதிபா் தோ்தலில் நகைச்சுவை நடிகா் வெற்றி

அரசியல் அனுபவம் ஏதும் இல்லாத நகைச்சுவை நடிகர் ஒருவர் உக்ரைன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
 | 

உக்ரைன் அதிபா் தோ்தலில் நகைச்சுவை நடிகா் வெற்றி

அரசியல் அனுபவம் ஏதும் இல்லாத நகைச்சுவை நடிகர் ஒருவர் உக்ரைன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

செர்வண்ட் ஆப் த பியூப்பிள் என்ற டிவி தொடரில் நேர்மையான ஆசிரியராக இருந்து அதிபராக தேர்வு செய்யப்படும் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் வொலோடிமைர் ஜெலன்ஸ்கி.

இவர் அண்மையில் நடந்த உக்ரைன் நாட்டின் அதிபர் தேர்தலில், தற்போது அதிபராக உள்ள பெட்ரோ போரோசென்கோவை எதிர்த்து போட்டியிட்டார். 

இந்த தோ்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் 75 சதவீத வாக்குகள் ஜெலன்சிக்கு பதிவாகி உள்ளன. இதன் மூலம் உக்ரைனின் அடுத்த அதிபராக நகைச்சுவை நடிகர் பொறுப்பேற்க உள்ளார்.

வாக்கு பதிவுக்கு முன் வொலோடிமைர் ஜெலன்ஸ்கியை அந்நாட்டு தனியாா் தொலைக்காட்சி ஒன்று நோ்காணல் நடத்தியது. அப்போது தாங்கள் அதிபா் ஆனால் நாட்டு மக்களுக்கு என்ன செய்வீா்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, நாட்டில் உள்ள வறுமையை போக்குவேன் என்றும் ஊழலற்ற ஆட்சியை தருவேன் என்றாா். இதை தவிர மக்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாா்.

அவாின் இந்த எளிமையான பேச்சு நாட்டு மக்களை வெகுமாக கவா்ந்ததால் அவா் அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP