முஸ்லீம்களுக்கு எதிரான சீனாவின் போலித்தனம் வெட்கக்கேடானது! - அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு

முஸ்லீம்களுக்கு எதிராக சீனா செய்யும் போலித்தனமான அடக்குமுறை, மிகவும் வெட்கக்கேடானது என்று அமெரிக்கா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
 | 

அமெரிக்க  வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ இதுகுறித்து கூறுகையில், "சீனா, ஒரு பக்கம் முஸ்லீம்களை கொடுமைப்படுத்தி வருகிறது, மற்றொரு பக்கம் தீவிரவாதத்திற்கு உறுதுணையாக இருந்து, தீவிரவாதிகளை பாதுகாக்கிறது. 

முஸ்லீம்களுக்கு எதிராக போலித்தனம் செய்யும் சீனாவின் செயல் வெட்கக்கேடானது. ஒருபக்கம் முஸ்லீம்களை கொடுமை செய்யும் சீனா, மறுபக்கம் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறது" என்று கூறியுள்ளார். 

முன்னதாக, இந்தியாவில் காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா சபையில் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP