புற்றுநோய் எதிரொலி...மார்பக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரான்ஸில் தடை!

மார்பக மாற்று சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களுக்கு ‘அனபிளாஸ்டிக் லார்ஜ் செல் லிம்போமா’ (ஏ.எல்.சி.எல்) என்ற புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளதால், மார்பக அறுவை சிகிச்சைக்கு பிரான்ஸ் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

புற்றுநோய் எதிரொலி...மார்பக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரான்ஸில் தடை!

மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களுக்கு ‘அனபிளாஸ்டிக் லார்ஜ் செல் லிம்போமா’ (ஏ.எல்.சி.எல்)  என்ற புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளதால், மார்பக அறுவை சிகிச்சைக்கு பிரான்ஸ் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பெண்கள் தங்களது மார்பக அழகிற்காக, அதன் அளவை குறைக்கவும், அதிகரிக்கவும் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வது தற்போது பிரபலமாகி வருகிறது. பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வதால் புற்றுநோய் வருகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. 

அதாவது, மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களுக்கு மார்பகத்தின் அருகே நீர்கட்டிகள் போன்று ஏற்படுகிறது. அந்த நீர்கட்டிகளை நீக்க, அவர்கள் மீண்டும் ஒரு அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் போது, ‘அனபிளாஸ்டிக் லார்ஜ் செல் லிம்போமா’ (ஏ.எல்.சி.எல்) என்ற புற்று நோய் தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

புற்றுநோய் எதிரொலி...மார்பக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரான்ஸில் தடை!

அமெரிக்காவில், மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதனால் புற்றுநோய் ஏற்பட்டு 9 பெண்கள் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பிரான்ஸ் நாடு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது அந்நாட்டில் பெண்கள் மார்பக மாற்று சிகிச்சை செய்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பிரான்ஸ் நாட்டின் தேசிய புற்றுநோய் சிகிச்சை நிறுவனம், பிரான்ஸில் 53 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதே நேரத்தில் இதற்கு முன்னதாக செயற்கை மார்பகம் பொருத்திய பெண்கள் அதனை நீக்க தேவையில்லை, இனிமேல் எந்த பெண்களும் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP