ஐ.நா தடை போருக்கான அழைப்பு: வட கொரியா

ஐ.நாவால் விதிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான செயல் என வட கொரியா குற்றசம்சுமத்தியுள்ளது.
 | 

ஐ.நா தடை போருக்கான அழைப்பு: வட கொரியா


ஐ.நாவால் விதிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான செயல் என வட கொரியா குற்றசம்சுமத்தியுள்ளது.

ஐ.நாவின் நடவடிக்கைகள் முழு பொருளாதார முற்றுகைக்கு சமமானது என வடகொரிய வெளியுறத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அரசின் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. வட கொரியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதே அமெரிக்காவை எதிர்ப்பதற்கான ஒரே வழி எனவும் அது கூறியுள்ளது. 

வடகொரியா தனது அணு ஆயுத சோதனையை அத்தனை எதிர்ப்புகளை மீறியும் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய தடை தீர்மானம் ஒன்றை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றி உள்ளது. இந்த புதிய தடையின் படி, வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களின் அளவு 90% குறைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பேரல் பெட்ரோலிய பொருட்களை மட்டுமே வடகொரியா பெற முடியும்.

கச்சா எண்ணெய்யை ஒரு வருடத்திற்கு 4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைக்கப்பட்டுள்ளதோடு இயந்திரங்கள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட வட கொரியா பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட கொரியாவின் முக்கிய ஆதாரமாக இருக்கும் வெளிநாட்டு பணத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் பணி புரியும் வடகொரியர்களை 24 மாதத்திற்குள் தங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் ஐநா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP