கஜகஸ்தான் நாட்டில் எரிந்து கருகிய பஸ்- 52 பேர் பலி

தீ விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சம்பவ இடத்திலேயே மீட்பு படையால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 | 

கஜகஸ்தான் நாட்டில் எரிந்து கருகிய பஸ்- 52 பேர் பலி


கஜகஸ்தான் நாட்டில் பஸ் ஒன்று திடீரென  தீபிடித்து எரிந்த விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கஜகஸ்தான் நாட்டில் உள்ள அக்டோபே மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை வழியாக இரு ஓட்டுநர்கள் மற்றும் 57 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீபிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டின் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 10.30 மணியளவில் நடந்துள்ளது. 

இந்த விபத்தில் 52 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உஸ்பக் குடிமக்களை ரஷ்யாவிலிருந்து அல்லது ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்ற பஸ்ஸாக அது இருக்கலாம் என்று  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP