பலோசிஸ்தான்- பேருந்தை வழிமறித்து 14 பேரை சுட்டுக்கொன்ற மா்ம கும்பல்

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை வழிமறித்த மா்ம நபர்கள் அவா்களில் 14 பேரை சுட்டுக்கொன்றனா்.
 | 

பலோசிஸ்தான்- பேருந்தை வழிமறித்து 14 பேரை சுட்டுக்கொன்ற மா்ம கும்பல்

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை வழிமறித்த மா்ம நபர்கள் அவா்களில் 14 பேரை சுட்டுக்கொன்றனா்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பலோசிஸ்தான் மாகாணம். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்களுக்கும், பிரிவினைவாத மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் எழுகின்றது. இதனால், எப்போதும் பதற்றம் நிறைந்த பகுதியாக இங்குள்ள சில இடங்கள் காணப்படுகிறது. 

இந்த நிலையில், கராச்சியில் இருந்து கவ்டாருக்கு பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்துகளை மடக்கிய துப்பாக்கிய ஏந்திய மர்ம நபர்கள், ஒவ்வொருவரையும் வரிசையாக சோதனையிட்டனர்.

அவர்களிடம் இருந்து அடையாள அட்டையை பரிசோதித்த மர்ம நபர்கள், பேருந்தில் இருந்து 16 பேரை கீழே இறக்கினர். அவர்கள் மீது 15 முதல் 20 பேர் கொண்ட துப்பாக்கிய ஏந்திய நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 16 பேரில் இரண்டு பேர் மட்டும் தப்பி ஓடினர். மீதமுள்ளோர் கொல்லப்பட்டனர். 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லெவீஸ் பகுதி அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலைக்கான காரணமும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் அடையாளமும் இன்னும் கண்டறியப்படவில்லை. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP