Logo

அப்பாவின் கிரெடிட் கார்டை வைத்து பாலித் தீவுக்கு சென்ற ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாத பெற்றோருடன் கோவித்துகொண்டு, 12 வயது சிறுவன் இந்தோனேசிய தீவுக்கு தனியாக பயணித்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என ஆஸ்திரேலிய போலிஸார் தெரிவித்துள்ளனர்.
 | 

அப்பாவின் கிரெடிட் கார்டை வைத்து பாலித் தீவுக்கு சென்ற ஆஸ்திரேலிய சிறுவன்

அப்பாவின் கிரெடிட் கார்டை வைத்து பாலித் தீவுக்கு சென்ற ஆஸ்திரேலிய சிறுவன்சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லாத பெற்றோரிடம் கோவித்துக்கொண்டு, 12 வயது சிறுவன் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியா தீவுக்குத் தனியாகப் பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறைக்கு இந்தோனேசியாவின் பாலித்தீவுக்குச் செல்ல முடிவு செய்திருந்தனர். ஆனால் திடீரெனச் சுற்றுலாவை அவர்கள் ரத்து செய்தனர். இதனால், மன வேதனை அடைந்த சிறுவன், வீட்டைவிட்டு வெளியேறினான். எங்கே சென்றான் என்று கண்டுபிடிக்க முடியாமல் அவனது குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவில் தேடிக்கொண்டிருந்தனர். 

அந்தச் சிறுவனோ, தனது பாஸ்போர்ட் மற்றும் பள்ளி அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் பெர்த் வழியாக இந்தோனேஷியாவின் பாலி தீவுகளுக்கு வந்தான். முதலில் இரண்டு விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறான். அவர்கள், சிறுவர்களைத் தனியாக அனுமதிப்பது இல்லை. பெற்றோர் அனுமதி கடிதம் இருந்தால் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர். மூன்றாவதாக லோ பட்ஜெட் விமான நிறுவனம் ஒன்றைத் தொடர்பு கொண்டிருக்கிறான். அவர்கள் வயதைப் பற்றிக் கவலைப்படாமல் டிக்கெட் விநியோகித்துவிட்டனர். 

அப்பாவின் கிரெடிட் கார்டை வைத்து பாலித் தீவுக்கு சென்ற ஆஸ்திரேலிய சிறுவன்

நேரடி செக் இன் செய்யாமல், இயந்திரம் மூலம் செக்கின் செய்து விமானத்துக்குள்ளும் நுழைந்துவிட்டான். கடைசியாக, மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் பாலித் தீவை அடைந்தான் சிறுவன். தனிமையில் இருக்கும் அந்தச் சிறுவனை அங்குள்ள போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது, "நான் 12 வயதுக்கு மேற்பட்டவன், மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன் என்று கூறி தன்னுடைய அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைக் காட்டியிருக்கிறான். 

அவன் மீது சந்தேகம் கொண்ட பாலி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தாம் சாகசம் செய்யும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறான். மேலும், தன்னுடைய சகோதரியுடன் பாலித் தீவுக்கு வந்ததாகவும், அவள் வெளியே சென்றுள்ளாள் என்றும் நம்பும்படி கூறியிருக்கிறான். இதை நம்பி அவனைப் பாலியில் அனுமதித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்படும் முன்னரே, விமான டிக்கெட் புக் செய்த கையோடு, ஹோட்டலில் அறையையும் புக் செய்திருந்தான். அவர்களிடமும் தன்னுடைய சகோதரி கதையைக் கூற அவர்களும் எதுவும் சொல்லாமல் அனுமதித்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவில் தேடி கிடைக்காத நிலையில், கிரெடிட் கார்ட் பில்லை பார்த்த சிறுவனின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இத பற்றிக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து பாலி காவல் துறையைத் தொடர்புகொண்ட ஆஸ்திரேலியா போலீசார், சிறுவன் பற்றித் தெரிவித்துள்ளனர். அவர்கள் சிறுவனை மீட்டு ஆஸ்திரேலியா போலீசில் ஒப்படைத்துள்ளனர். 

சிறுவன் இவ்வளவு கட்டுப்பாடுகளை மீறி வெளிநாட்டுக்குப் பறந்தது எப்படி என்று தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் இப்படிச் சிறுவர்கள் பயணம் செய்யாமல் தடுப்பது எப்படி என்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

அப்பாவின் கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பாலிக்கு சென்றதைத் தவிரச் சிறுவன் வேறு எதுவும் செய்யவில்லை என்பதால், அவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர். இதனால், அவன் எதிர்காலத்தில் விமானப் பயணங்கள் மேற்கொள்வதில் சிக்கல் இருக்காது என்று தெரிவித்துள்ளனர். 

சிறுவன் தன்னுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திப் பாலி தீவுகளுக்குச் சென்று வந்துவிட்டான். இதனால், அவனது அப்பாவுக்கு 8000 ஆஸ்திரேலியா டாலர்கள் (நம் ஊர் மதிப்பில் 4 லட்ச ரூபாய்) செலவு ஏற்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP