ஆஸ்திரேலியா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதனால் அங்கிருந்த ரசாயனப் பொருட்கள் வெடித்துச் சிதறின.
 | 

ஆஸ்திரேலியா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் அங்கிருந்த ரசாயனப் பொருட்கள் வெடித்துச் சிதறின.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 175 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். பயங்கரமாக பற்றிப் பரவிய தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறுகின்றனர். முழுவதுமாக தீயை அணைக்க சில நாட்களாகி விடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

புகை, வெப்பம் காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரசாயனக் கசிவால் உடல் நலத்திற்கு ஆபத்து நேரிடுமா என்று விளக்கம் கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP