துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; 4 வீரர்கள் பலி

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பலியாகினர்.இதனை இஸ்தான்புல் ஆளுநர் அலி ஏர்லிக்யா உறுதி செய்துள்ளார். உள்ளூர் நேரப்படி 18.51 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
 | 

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; 4 வீரர்கள் பலி

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பலியாகினர்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அந்நாட்டு ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை இஸ்தான்புல் ஆளுநர் அலி ஏர்லிக்யா உறுதி செய்துள்ளார். 

உள்ளூர் நேரப்படி 18.51 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்தது அறிந்து இஸ்தான்புல் பொது வழக்கறிஞர் அவ்விடத்திற்கு சென்று விபத்து குறித்து ஆய்வு நடத்தி வருவதாக ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP