அர்ஜென்டினா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'ஸ்பெஷல் காண்டம்'

அர்ஜென்டினா நாட்டில் உள்ள துலிபன் அர்ஜென்டினா(Tulipan Argentina) எனும் நிறுவனம் புதிய வகையான ஒரு காண்டமை (ஆணுறை) அறிமுகப்படுத்தியுள்ளது.
 | 

அர்ஜென்டினா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'ஸ்பெஷல் காண்டம்'

அர்ஜென்டினா நாட்டில் உள்ள துலிபன் அர்ஜென்டினா(Tulipan Argentina) எனும் நிறுவனம் புதிய வகையான ஒரு காண்டமை (ஆணுறை) அறிமுகப்படுத்தியுள்ளது.

'கான்சென்ட் காண்டம்' (Consent Condem) என்று பெயரிடப்பட்டுள்ள  இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், உடலுறவில் ஈடுபடும் இரு பாலாரும் சேர்ந்து தங்களது நான்கு கைகளைளால் சேர்த்து அழுத்தினால், காண்டம் பாக்கெட் திறக்கும். 

அதாவது, உடலுறவில் ஈடுபடும் இருவரும், முழு ஒத்துழைப்புடன், சம்மதத்துடன் தான் ஈடுபடுகிறார்கள் என்பதற்காகவே இந்த ஆணுறையை தயாரித்துள்ளோம். இதன் மூலம் அவர்களிடையே ஒரு நம்பிக்கைத்தன்மையும் உருவாகிறது என்று நிறுவனம் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகிலேயே முதல் முறையாக, இவ்வளவு ஒரு ஸ்பெஷலான முறையில் காண்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அர்ஜென்டினா மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP