Logo

விமானப்படை தாக்குதல்: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆஸ்திரேலியா!

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஆஸ்திரேலிய அரசு இந்தியாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
 | 

விமானப்படை தாக்குதல்: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆஸ்திரேலியா!

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஆஸ்திரேலிய அரசு, இந்தியாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை இன்று அதிகாலை 3.30 மணியளவில் குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து, 12 'மிராஜ் 2000' ரக போர் விமானங்கள், 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. 

இதில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியான பால்கோட், சாகோதி, முஷாரஃபாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா பகுதியிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், 10 தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 300 பேர் வரையில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.  

விமானப்படை தாக்குதல்: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆஸ்திரேலியா!

இந்நிலையில் முதலாவதாக ஆஸ்திரேலிய அரசு இந்த தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மரைஸ் பெயினே வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீர் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பற்றி இந்திய வெளியுறவுத் துறை கூறியது. 

இதன்பிறகாவது பாகிஸ்தான் உடனடியாக தீவிரவாதத்திற்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும். இதன்பின்னரும் தீவிரவாதத்தை வளரவிடக்கூடாது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை உருவாக்குவதில் ஆஸ்திரேலிய அக்கறை கொண்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

newstm.in

12 போர் விமானங்கள்; 1000 கிலோ வெடிமருந்து; 21 நிமிட துல்லிய தாக்குதல்: நடந்தது எப்படி?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP