பாலியல் தொல்லையிலிந்து தப்பிக்க ஆன்லைன் ஷாப்பிங்கை நாடும் ஆப்கானிஸ்தர்கள்!

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு மற்றும் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறாமல் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகளவு கவனம் செலுத்துவதாக அண்மையில் வெளிவந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 | 

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வருடத்தில் தற்கொலைப்படை தாக்குதல், குண்டுவெடிப்பு மற்றும் பாலியல் கொடுமைகளில் இருந்து தப்பிக்க பேஷன் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறைவாக இருந்த ஆன்லைன் வர்த்தகம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்பவர்களில் 80% பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தற்கொலைப்படை தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களிடம் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்ததும் ஆன்லைன் வர்த்தகம் உயர்ந்துள்ளதற்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அப்கானிஸ்தானில்  இளைஞர்கள் ஆன்லைன் பிசினஸில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஆன்லைன் விற்பனை செய்பவர்களுக்கும் அவ்வப்போது அச்சுறுதல் வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து  வணிக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முசாபர் குய்காண்டி கூறுகையில்,“நாட்டில் பதற்றம் ஏற்படும்போது ஆன்லைன் ஷாப்பிங் மக்களுக்கு பலன் தருகிறது. ஆனால் இங்கு சில உரிமம் பெறாத ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் கூட செயல்பட்டுவருகிறது” என கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP