ஆப்கான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மசூதியில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 | 

ஆப்கான்- மசூதியில் குண்டு வெடித்து ஒருவர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மசூதியில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பக்தியா கோட் என்ற பகுதியில் வெள்ளிக்கிழமையான இன்று ஏராளமானவர்கள் அங்குள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த தலைமை இமாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP