அபிநந்தனை போல் மற்ற இந்திய வீரர்களையும் மீட்க கோரிக்கை!

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை போன்று, பாகிஸ்தான் சிறைகளில் இருக்கும் 54 இந்திய வீரர்களையும் மீட்க வேண்டும் என்று வீரர்களின் குடும்பத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

அபிநந்தனை போல் மற்ற இந்திய வீரர்களையும் மீட்க கோரிக்கை!

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை போன்று, பாகிஸ்தான் சிறைகளில் இருக்கும் 54 இந்திய வீரர்களையும் மீட்க வேண்டும் என்று அந்த வீரர்களின் குடும்பத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த 27-ஆம் தேதி,  பாகிஸ்தான் ராணுவத்தின் வசம் சிக்கினார். இந்தியா மற்றும் உலக நாடுகளின் நிர்பந்தத்தினால், இரு தினங்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், 1971ம் ஆண்டு இந்திய -பாகிஸ்தான் போருக்கும், அதன் பிறகும்  பாகிஸ்தானிடம் சிக்கிய 54 இந்திய வீரர்கள் அந்த நாட்டு சிறைகளில் இருப்பதாகவும், அபிநந்தனை போன்று அவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த வீரர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக  மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கைகள் வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

1971ம் ஆண்டு போருக்கு பிறகு, இந்திய ராணுவ வீரர்கள் 30 பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 24 வீரர்கள் என மொத்தம் 54 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP