துருக்கி ராணுவ தாக்குதலில் 26 குர்து போராளிகள் உயிரிழப்பு

ஈராக் - துருக்கி எல்லையில், துருக்கி விமானப்படை நடத்திய வான் தாக்குதலில் 26 குர்து போராளிகள் உயிரிழந்தனர்.
 | 

துருக்கி ராணுவ தாக்குதலில் 26 குர்து போராளிகள் உயிரிழப்பு

ஈராக் - துருக்கி எல்லையில், துருக்கி விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 26 குர்து போராளிகள் உயிரிழந்தனர். 

ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. 

ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் இயக்கத்தினர், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர். இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் அவ்வப்போது அவர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்கும் நோக்கத்தில் துருக்கி, ஈராக் மற்றும் அமெரிக்கா தீவிரமாக உள்ளன. 

இந்த நிலையில், தென்கிழக்கு துருக்கியின் தியார்பகிர், சிர்னாக் மாகாணங்கள் மற்றும் வடக்கு ஈராக்கின் அவாசின் - பாஸ்யான் பகுதிகளில் துருக்கி விமானப்படையினர் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் வான் தாக்குதல் நடத்தினர். 

இதில், அந்த முகாம்களில் தங்கியிருந்த 26 குர்து போராளிகள் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.மேலும், அவர்களது முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் மற்றும் வெடிமருந்துகளும் இந்த தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP