இந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரும் பலி?

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று மீட்புப்படை குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை பங்கல் பினாங்கு தீவுக்குச் சென்ற விமானம் விபத்துத்துக்குள்ளானது.
 | 

இந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரும் பலி?

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று மீட்புப்படை குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை பங்கல் பினாங்கு தீவுக்குச் சென்ற விமானம் விபத்துத்துக்குள்ளானது. முதலில் விமானம் மயமானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் கடலில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த விமானத்தில், இன்று பெரியவர்கள் 178 பேர், ஒரு சிறுவன், 2 கைக் குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 189 பேர் பயணம் செய்தனர்.

விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, தேடுதல் பணி நடைபெற்றது. இந்நிலையில், விமானத்தில் சென்ற 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று மீட்புப்படை குழுவினர் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP