பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகத்தில் தீவிரவாத தாக்குதல்: இரு போலீசார் பலி

பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு போலீசார் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 | 

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் க்ளிஃப்டன் என்ற பகுதியில் உள்ள சீன துணைத் தூதரகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. தொடர்ந்து மர்ம நபர்கள் 4 பேர் தூதரகத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசாரால் கருதப்படுகிறது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தினால் பாகிஸ்தான் கராச்சியில் பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP