Logo

பாகிஸ்தான் மார்க்கெட்டில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில், 30 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

பாகிஸ்தான் மார்க்கெட்டில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில், 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு என்றும், மார்க்கெட்டில் பல்வேறு மக்கள் இருந்த சமயம் வெடிக்க வைக்கப்பட்டதகாவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எந்த மாதிரியான வெடிகுண்டு என்று இதுவரை தெரியவில்லை. சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி, தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் குடும்பத்திற்கும் காயமடைந்தவர்களுக்கு தனது இரங்கல்களை அவர்  தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் கான் உறுதியளித்தார்.

"கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை" என அந்த மாகாணத்தின் முதலமைச்சர் மெஹ்மூத் கான் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP