பாகிஸ்தானை கதறவிட்டு வரும் நரேந்திர மோடி!!!

நேற்று அணுகுண்டினை பயன்படுத்துவேன் என்று கூறிப்பார்த்து அது செல்லுபடியாகவில்லை என்றவுடன், இன்று பாகிஸ்தான் ஆக்கிமிப்பை காப்போம் என்று புதிய பிரசாரத்தில் இறங்கியுள்ளார் இம்ரான்கான்.
 | 

பாகிஸ்தானை கதறவிட்டு வரும் நரேந்திர மோடி!!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாதுகாக்க வேண்டும் (SavePOK) என்ற பிரச்சாரத்தை பாகிஸ்தானில் முன் வைத்துள்ளார், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான்.

1947-க்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது, மன்னர் ஹரி சிங் ஆட்சி செய்த போது, காஷ்மீருக்குள், பாகிஸ்தானை சேர்ந்த பழங்குடியினர் புகுந்து கொலை, கொள்யையில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, பெண்களை பலாத்காரம் செய்து அட்டூழியம் செய்தனர்.

இதையடுத்து, மன்னர் ஹரி சிங் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அப்போதைய பிரதமர் நேரு, ராணுவத்தை கொண்டு, அந்த பழங்குடியினரை விரட்டியடித்தார். இருந்த போதிலும் இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தை பிரதமர் நேரு அமைச்சரவையின் ஆலோசனையில்லாமல், தன்னிச்சையாக ஐநாவிடம் கொண்டு சென்ற காரணத்தால், இந்தியாவில் உள்ள காஷ்மீர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானில் வசம் உள்ள காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தானுக்கும் என  ஜம்மு-காஷ்மீர் பிரிந்துபோனது.

அதுமட்டுமின்றி, இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் பிரிவினைவாதத்தை தூண்டி விட்டும், ஊடுருவல்காரர்களை ஏவிவிட்டும் அந்த மாநிலத்தில் அமைதியற்ற சூழலை பாகிஸ்தான் உருவாக்கி வந்தது.

பாகிஸ்தானை கதறவிட்டு வரும் நரேந்திர மோடி!!!

அதற்கு அந்த மாநிலத்தில் உள்ள பிரிவினைவாத சக்திகளும், உள்ளூர் அரசியல்வாதிகளும் பெருமளவில் ஆதரவு தெரிவித்து வந்தனர். குறிப்பாக 1980ஆம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டின் ஊக்குவித்தல் காரணமாக காஷ்மீர் மக்கள் பெரும் வன்முறையை சந்தித்து வந்தனர். தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி வன்முறையை கட்டுப்படுத்தத் தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு ஆன பிறகு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை தற்போதைய மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதற்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, இந்தியா கைப்பற்றிவிடுமோ என்ற அச்சத்தினால், (SavePOK) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாதுகாக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை பாகிஸ்தானில் முன்வைத்துள்ளார் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான்.

எப்படியாகினும் சர்வதேச பிரச்னையாக காஷ்மீர் பிரச்னையை கொண்டு சென்று விட்டால், உள்ளூரில் உள்ள பொருளாதார பிரச்னைகளிலிருந்து தன் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடலாம் என இம்ரான் நினைத்தார். ஏனெனில் இதுவரை அந்த நாட்டில் காஷ்மீர் பிரச்னையை மதரீதியிலான ஓர் உணர்வுபூர்வமான பிரச்னையாகக் கையாண்டு வந்துள்ளனர் அந்த நாட்டை இதுவரை ஆட்சி செய்து வந்தவர்கள். 

பாகிஸ்தானை கதறவிட்டு வரும் நரேந்திர மோடி!!!

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், பிரான்ஸில் நேற்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில், காஷ்மீர் விவகாரத்தை இந்தியா கையாண்டு கொள்ளும்  என்றும், அதில் ஏனைய நாடுகளை ஈடுபடுத்துவதில் இந்தியாவிற்கு விருப்பமில்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடி ட்ரம்பிடம் நேரடியாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, காஷ்மீர் விவகாரம் இந்தியா- பாகிஸ்தான் இடையேயானது என அமெரிக்காவும் பின்வாங்கிக்கொள்ள, ஒரே நம்பிக்கையான ட்ரம்பும், ஜகா வாங்கிக்கொண்டதால்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதறிப்போயுள்ளார். அதன் காரணமாக நேற்று அணுகுண்டினை பயன்படுத்துவேன் என்று கூறிப்பார்த்து, அது செல்லுபடியாகவில்லை என்றவுடன், இன்று போக் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் ஆக்கிமிப்பை காப்போம் என்று புதிய பிரசாரத்தில் இறங்கியுள்ளார் இம்ரான்கான்.

இந்த பதற்றத்திற்கு சரித்திர ரீதியில் பின்னணி  இருக்கிறது. எனவேதான் இந்தியா, போக்கையும் கைப்பற்றி உலக அரங்கிலும், உள்ளூரிலும் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு விட வேண்டுமோ என  ஒட்டு மொத்த பாகிஸ்தான் அரசும் பதறி வருகிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய அவதாரமான ஜனசங்கம் கட்சியை தோற்றுவித்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்து உயிரிழந்தார். அதுமட்டுமின்றி, காஷ்மீருக்கு வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டுமென்று மட்டும் கோரிவரவில்லை.

நமக்கு சொந்தமான பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் மத்திய அரசு மீட்க வேண்டுமென்று  கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனசங்கமும், பாரதிய ஜனதாவும் போராடி வந்துள்ளன. தற்போது அது நடந்து விடுமோ என்பதுதான் இம்ரான் கானுக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தோன்றியுள்ள பதற்றத்துக்குக் காரணம். எல்லாவற்றிற்கும் ஓர் சரித்திரம் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

மொத்தத்தில் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளின் தூக்கத்தை மட்டும் கெடுக்கவில்லை, எல்லை கடந்து பாகிஸ்தான் அரசியல்வாதிகளையும் கதற வைத்து வருகிறார் என்பதே உண்மை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP