காஷ்மீர் விவகாரம்: இந்திய ஆதரவு நாடுகள் பாகிஸ்தானின் ஏவுகணைகளை சந்திக்க நேரிடும்: எச்சரித்த அலி அமின் கந்தாபூர்!!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற இந்தியாவின் முடிவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் பாகிஸ்தானின் ஏவுகணைகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித் பல்திஸ்தானின் அமைச்சர் அலி அமின் கந்தாபூரின் வீடியோ காட்சி ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, மத்திய அரசின் இந்த முடிவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது பாகிஸ்தான். இதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 27 அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டத்திலும் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வியெழுப்பியது பாகிஸ்தான். 

எனினும், சர்வதேச நாடுகளில் சீனா, துருக்கி போன்ற ஒன்றிரண்டு நாடுகளை தவிர மற்ற நாடுகள் அனைத்தும், காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவுடன் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு கை விரித்ததில் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் பல வழிகளில் இந்தியா மீது தாக்குதல் மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வந்தது.

இதனிடையில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை எனில் போர் களத்தில் தான் இருநாடுகளும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து, தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித் பல்திஸ்தானின் அமைச்சர் அலி அமின் கந்தாபூர், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற இந்தியாவின் முடிவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் பாகிஸ்தானின் ஏவுகணைகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

இவரை தொடர்ந்து, அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது மற்றும் தகவல்துறை அமைச்சர் சௌதரி ஃபவாத் ஹுசைன் இருவரும் இவரின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP