காஷ்மீர் குறித்து சர்வதேச நாடுகள் அலட்சியம்: இம்ரான் குற்றச்சாட்டு!!

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் காட்டி வரும் அலட்சிய போக்கு வருத்தமளிக்கிறது என ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்திற்காக நியூயார்க் சென்றிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 | 

காஷ்மீர் குறித்து சர்வதேச நாடுகள் அலட்சியம்: இம்ரான் குற்றச்சாட்டு!!

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் காட்டி வரும் அலட்சிய போக்கு வருத்தமளிக்கிறது என ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்திற்காக நியூயார்க் சென்றிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியப் பிரதேசங்களாக பிரிக்க புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

உள்நாட்டு விவகாரம் தொடர்பான இந்த விவகாரம் குறித்து இந்திய அரசின் இந்த முடிவினை பாகிஸ்தான், சர்வதேச பிரச்சனையாக மாற்றிட முயற்சி செய்து வருகிறது. பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்திலும் இதை பற்றி பேச முடிவு செய்து, அமெரிக்காவின் உதவியை நாடியது.

இது குறித்து,அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான உரையாடலில், "காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராகத் தான் உள்ளேன். ஆனால் அதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவிக்க வேண்டுமே. அதற்கு அவர் தயாராக இல்லாத நிலையில். நீங்கள் மோடியிடமே நேரடியாகப் பேசி இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்" என்று கூறிவிட்டார்.

மேலும், காஷ்மீர் விவகாரம் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு,  "காஷ்மீர் விவகாரம் மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்சனைகளை மோடியே கவனித்துக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார். 

இதனால் மிகவும் கவலையடைந்த பாகிஸ்தான் பிரதமர், "காஷ்மீர் மக்களின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது. நிலைமை இயல்பாக தான் இருக்கிறது என்றால் எதற்காக அங்கே 9,00,000 காவலாளிகள் ? இதே நிலை அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ நடந்தால் இப்படிதான் வேடிக்கை பார்க்குமா இந்த நாடுகள்? சர்வதேச நாடுகளின் அலட்சிய போக்கு மிகுந்த வருத்ததை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP