ஐக்கிய நாடுகளின் பாகிஸ்தான் பிரதிநிதியாக பதவியேற்ற முனீர் அக்ரம்

ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க முயன்று தோற்றதால், ஐக்கிய நாடுகளின் பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோதிக்கு பதிலாக முனீர் அக்ராமை நியமித்துள்ளார் பிரதமர் இம்ரான் கான்.
 | 

ஐக்கிய நாடுகளின் பாகிஸ்தான் பிரதிநிதியாக பதவியேற்ற முனீர் அக்ரம்

ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க முயன்று தோற்றதால், ஐக்கிய நாடுகளின் பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோதிக்கு பதிலாக முனீர் அக்ரமை நியமித்துள்ளார் பிரதமர் இம்ரான் கான்.

ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாடு, கடந்த செப் 27., அன்று நடைபெற்ற நிலையில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அநிதஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற நினைத்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். ஆனால், அவருக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக ஐநா சபையின் உறுப்பு நாடுகளில் சீனா, துருக்கி போன்ற நாடுகள் தவிர ஏனைய நாடுகள், இந்தியாவுடன் இது குறித்து கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருமாறு கூறி கைவிரித்து விட்டன. சர்வதேச நாடுகளின் இந்த பதிலில் ஏமாற்றமடைந்த பிரதமர் கான், ஐக்கிய நாடுகளின் பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோதியின் பதவியில் முனீர் அக்ரமை அமர்த்தவதாக அறிவித்துள்ளார்.

மேலும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள முனீர் அக்ரம், ஏற்கனவே உள்நாட்டு வன்முறை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP