Logo

அமெரிக்கா தொடுக்கும் வர்த்தகப் போர்: சீனா, ரஷ்யாவிடம் கைகோர்க்கும் ஈரான்

அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் ஈரான் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் அதனை சரி செய்ய அமெரிக்காவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சீனா, ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்கும் உத்தியை ஈரான் கையாண்டு வருகிறது.
 | 

அமெரிக்கா தொடுக்கும் வர்த்தகப் போர்: சீனா, ரஷ்யாவிடம் கைகோர்க்கும் ஈரான்

அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் ஈரான் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் அதனை சரி செய்ய அமெரிக்காவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்கும் உத்தியை ஈரான் கையாண்டு வருகிறது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சீனாவின் உதவியை ஈரான் எதிர்நோக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமெரிக்காவில் இயங்கி வரும் RAND அமைப்பிலுள்ள மூத்த அரசியல் நோக்கர் ஆரியானே தபதபாய் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் ஈரான் விரைவில் சீனா, ரஷ்யாவுடன் கைக்கோர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

"பொருளாதார பின்னடைவிலிருந்து மீள ஈரான் சீனாவின் உதவியை கோரவுள்ளது. விரைவில் அதனை நாம் காண்போம். ஆனால், இதற்கு கைமாறாக சீனா சில கிடுக்குப்பிடி நிபந்தனைகளை விதிக்கக் கூடும்'' என்று அவர் கூறியுள்ளார். அதேபோல, ரஷ்யாவின் உதவியையும் ஈரான் கோருவதாக கூறப்படுகிறது. இந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி விதிகளை எளிதாக்கும் முயற்சிகள் நடப்பதாகவும்  கூறப்படுகிறது. 

அமெரிக்காவில் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அமெரிக்கா போல தனது நட்பு நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்கா அதன் வெளியுறவுத்துறையின் மூலம் நிர்பந்தித்து வருகிறது. 

இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி குறைவால் அதன் தேவை அதிகரிப்பின் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்து சார்வதேச தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, வரும் நவம்பர் மாதம் 4ம் தேதிக்குள் முழுமையாக கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newstm .in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP