ஓயாத போர் சூழல்: நிவாரண உதவி அளிப்பதில் சிக்கல் - ஐ.நா.

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் தாக்குதல்கள் ஓயாத நிலையிலும் ஐ.நா. சில உடனடி நிவாரணப் பணிகளைத் தொடங்கியது. ஆனால் அதனை முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 | 

ஓயாத போர் சூழல்: நிவாரண உதவி அளிப்பதில் சிக்கல் - ஐ.நா.

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் தாக்குதல்கள் ஓயாத நிலையிலும் ஐ.நா. சில உடனடி நிவாரணப் பணிகளைத் தொடங்கியது. ஆனால் அதனை முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிரியாவில் அரசு கூட்டு படையினரின் தாக்குதலில் சின்னாபின்னமான கிழக்கு கூட்டா நகரத்தில் ஐ.நா. மனிதாபிமான உதவிகளை செய்யத் தொடங்கியுள்ளது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இது தொடர்பானத் தீர்மானம் எடுத்தது. இதனையடுத்து ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிரியாவில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். மருந்துகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 50 வாகனங்கள் கூட்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ஓயாத போர் சூழல்: நிவாரண உதவி அளிப்பதில் சிக்கல் - ஐ.நா.

கவுட்டாவில் 50-க்கும் அதிகமானோர் பலி: கூட்டா அருகே அரசுப் படை நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். கடந்த 15 நாட்களில் மட்டும் இந்தப் பகுதியில் நடந்துவரும் தாக்குதலில் 690 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓயாத போர் சூழல்: நிவாரண உதவி அளிப்பதில் சிக்கல் - ஐ.நா.

இடைக்காலப் போர் நிறுத்தக் கோரிக்கை: நிவாரணப் பணிகளுக்கு 5 மணிநேர போர் நிறுத்தம் போதாது என்று தெரிவித்துள்ள ஐ.நா. குழு குறைந்தது 12 மணிநேரம் போர் நிறுத்தம் செய்ய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். பாதியில் நிறுத்தப்பட்ட நிவாரண உதவிகள்: இந்த நிலையில், நிவாரண உதவிகளை கொண்டு சென்ற அனைத்து வாகனங்களிலிருந்தம் பொருட்களை விநியோகிக்க முடியாத சூழல் இருந்ததாக செஞ்சிலுவை சங்க அதிகாரி சாஜத் மாலிக் கூறினார். மேலும் அங்குள்ள மக்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓயாத போர் சூழல்: நிவாரண உதவி அளிப்பதில் சிக்கல் - ஐ.நா.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP