சவூதி அரேபியாவில் ஜெனாத்ரியா கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சுஷ்மா ஸ்வராஜ்

சவூதி அரேபியாவில் ஜெனாத்ரியா கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சுஷ்மா ஸ்வராஜ்
 | 

சவூதி அரேபியாவில் ஜெனாத்ரியா கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்  சுஷ்மா ஸ்வராஜ்


சவூதி அரேபியா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அங்கு நடைபெற்று வரும் ஜெனாத்ரியா கலைநிகழ்ச்சியை, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அடில் அல் ஜுபிருடன்  பார்வையிட்டு மகிழ்ந்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வளைகுடா நாடுகள் கலந்துகொள்ளும் ஜனத்ரியா திருவிழாவை தொடங்கி வைக்க கடந்த 6ம் தேதி சவூதி அரேபியா சென்றார். இதனை அடுத்து வெளிநாடுகள் வாழ்இந்தியர்கள் மத்தியில் சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில், சவூதி அரேபியாவில் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்தியச் சமூகத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார். 

பின்னர் சவூதி அரேபியா வெளியுறவுத் துறை அமைச்சர் அடில் அல்-ஜூபியரை ரியாத் நகரில் நேற்று சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், எரிசக்தி, ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தார்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஜெனத்ரியா கலைநிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதையடுத்து, மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் இணை மந்திரி வி.கே.சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள உற்பத்தி பொருள்களை பேட்டரி காரில் அமர்ந்தபடி, அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி அடில் அல் ஜுபிருடன், சுஷ்மா சுவராஜ் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP