Logo

ஃபார்முலா ஒன் பந்தயத்தில் சவுதி பெண்: சீர்த்திருத்தத்தை குறிக்கும் முதல் நிகழ்வு

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட நேற்று அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அசீல் அல்-ஹமாத் என்பவர் ஃபார்முலா ஒன் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
 | 

ஃபார்முலா ஒன் பந்தயத்தில் சவுதி பெண்: சீர்த்திருத்தத்தை குறிக்கும் முதல் நிகழ்வு

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட நேற்று அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அசீல் அல்-ஹமாத் என்பவர் ஃபார்முலா ஒன் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

சவுதி அரேபியாவில் ஷரியத் இஸ்லாமிய சட்டம் கடைப்பிடிக்கப்படுவதால், அங்கு பெண்களுக்கு அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதனிடையே இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சியில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட பல நடைமுறைக்கு சாத்தியப்படாத சட்டங்கள் திருத்தப்பட்டன. 

பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நேற்று (ஜூன் 25) நீக்கியது. இதனை அடுத்து, அங்கு பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதற்கு மிகுந்த வரவேற்பும் உள்ளது. 

இந்த நிலையில், அபுதாபியில் ஃப்ரெஞ்ச் ஓபன் ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயம் நடைபெற்றது. சவுதி அரேபியாவில் அமலுக்கு வந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை குறிக்கும் வகையில், இந்த பந்தயம் தொடங்கும் முன், சவுதி அரேபியா கார்பந்தய அமைப்பின் முதல் பெண் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள அசீல் அல்-ஹமாத் ஃபார்முலா ஒன் காரை ஓட்டினார். 

அவர் ஓட்டிய கார் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் முதலிடம் பிடித்த கிமி ராய்க்கோனென் பயன்படுத்திய கார் என்பது இதில் மேலும் ஒரு சிறப்பாகும். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP