லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 90 பேர் பலி

லிபியா அருகே அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
 | 

லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 90 பேர் பலி

லிபியா அருகே அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஐ.நா-வின் சர்வதேச அகதிகள் அமைப்பு இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "லிபியா கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்தது. இதில், 90க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில், 10 பேர் உடல் லிபிய கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. மற்றவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. 10 பேரில், எட்டு பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். மீதி இரண்டு பேர் லிபியாவைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் நீச்சல் தெரிந்ததால் உயிர் தப்பிய இரண்டு பேர் லிபியாவில் கரை ஏறினர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் யாராவது உயிர் தப்பினார்களா மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். உயிரிழந்து கடலில் மிதக்கும் உடல்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது. 

லிபியா வழியாக ஐரோப்பாவின் தென் பகுதியை எளிதில் அடைய முடியும் என்பதால் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக மிக ஆபத்தான லிபியா கடற்பகுதியை கடக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 6 லட்சம் பேர் இப்படிக் கடல் கடந்து ஐரோப்பாவுக்குச் சென்றுள்ளனர். அதில் அதிகம் பேர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் என்று சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP