பின் லேடன் மகனுக்கும் 9/11 தாக்குதலில் நேரடியாக செயல்பட்ட தீவரவாதி மகளுக்கும் திருமணம்!

படுகொலை செய்யப்பட்ட அல் காய்தா முன்னாள் தலைவர் பின் லேடனின் மகனும் நியூயார்க் 9/11 தாக்குதலில் முக்கிய சதியில் ஈடுபட்ட தீவிரவாதி முகமது அட்டாவின் மகளும் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

பின் லேடன் மகனுக்கும் 9/11 தாக்குதலில் நேரடியாக செயல்பட்ட தீவரவாதி மகளுக்கும் திருமணம்!

அல் - கய்தா முன்னாள் தலைவர் பின் லேடனின் மகனும், நியூயார்க் 9/11 தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய பயங்கரவாதி முகமது அட்டாவின் மகளும் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இங்கிலாந்திலிருந்து வெளியாகும்  'தி கார்டியன்' பத்திரிக்கை பின் லேடன் குடும்பத்தினரின் பேட்டியை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பின் லேடனின் அம்மா உள்ளிட்டவர்களின் பேட்டி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பின் லேடனின் சகோதரர்கள் அகமது மற்றும் ஹசன் அல் அட்டாஸ் ஆகியோர் பேட்டி வெளியாகி உள்ளது. 

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் உள்ள வர்த்தக மையத்தின் விமானங்களை மோதச் செய்து தாக்குதலை நடத்தியது அல் கய்தா. இதில் இரட்டை கோபுரத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பின் லேடனை பிடிக்கும் வேட்டையில் அமெரிக்க இறங்கியது. ஆப்கானிஸ்தான், ஈராக்கை ஒரு வழி செய்தது அமெரிக்கா. ஆனால், பின்லேடன் பாகிஸ்தானில் மிகவும் பாதுகாப்பாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

கடந்த 2011ம் ஆண்டு மே 2-ம் தேதி ஒசாமா பின் லேடனை, அவரது பாகிஸ்தானின் அபோதாபாத் வீட்டில் அமெரிக்கப் படைகள் கொன்றனர். இந்தச் சம்பவத்தின் பின் அல் காய்தா பெரிய அளவில் தலைத்தூக்காவிடிலும், தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவை பழித் தீர்க்க உள்ளதாகவும் கூறி அவருகிறது. 

இதன் பின்னர், அல் காய்தா அமைப்பில் இருந்த ஒசாமாவின் மகன் காலித்தையும் அமெரிக்கப் படைகள் சுட்டுக்கொன்றன. ஒசாமாவின் மற்றொரு மகன் சதாத் 2009-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

ஆனால், மற்றொரு மகன் ஹம்சா பின் லேடன் அல் காய்தா அமைப்பின் முக்கியத் தலைவர் பொறுப்பில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். தனது தந்தையைக் கொன்ற அமெரிக்கப் படைகளை பழிவாங்கும் வகையில் அவர் தொடர்ந்து இயக்கத்தில் பணியாற்றி வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒசாமா பின் லேடனின் 3வது மனைவியின் மகன் தான் இந்த ஹம்சா பின் லேடன். இவருக்கும் இரட்டைக் கோபுரத்தை இடிக்க விமானத்தைக் கடத்திய தீவிரவாதி முகமது அட்டாவின் மகளுக்கும் தான் திருமணம் நடந்ததாக தற்போது கூறப்படுகிறது.  

இது குறித்து ஒசாமா பின் லேடனின் சகோதரர்கள் அகமது மற்றும் ஹசன் அல் அட்டாஸ் பேட்டியில் கூறுகையில், ''எங்கள் சகோதரர் ஒசாமாவின் மகன் ஹம்சா பின் லேடன் முகமது அட்டாவின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார் என்று அறிந்தோம். ஆனால் இப்போது, ஹம்சா குடும்பத்துடன் எங்கு தங்கி இருக்கிறார் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாது. ஆப்கானிஸ்தானில் இருக்கிறார் என்பது மட்டும் தெரியும்'' எனத் தெரிவித்தனர்.

ஹம்சா பின் லேடன் தலைத் தூக்க தயாரான நிலையில் ஆப்கானிஸ்தானில் செயல்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அடுத்ததாக இவரைத் தான் மேற்கத்திய நாடுகள் குறிவைத்துள்ளன. 

ஒசாமாவின் 3-வது மனைவியைத் தவிர்த்து மற்ற 2 மனைவிகள் குடும்பத்தினருக்கு சவுதி அரேபியாவின் முன்னாள் இளவரசர் மகமது பின் நயிப் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடையவை: 

என் மகன் மிகவும் நல்லவன்: கடந்த காலத்தை நினைத்து வருந்தும் பின் லேடனின் தாய்!

பின் லேடனின் கடைசி தொழுகை: மனைவி உருக்கமான பேட்டி!  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP