ஈரான் ராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி

சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ஈரான் ராணுவ தளங்களின் மீது, இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது. இதில் 23 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில், 5 பேர் சிரியா வீரர்கள் என்றும், 18 பேர் கூட்டு படை வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அரசு விலகியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் ஈரான் படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இதற்கு அமெரிக்க கூட்டணி நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்த போதும், இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு ஆதரவு தெரிவித்து வந்தார். 

ஒப்பந்தத்தின் முறிவை தொடர்ந்து, இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சிரியாவில், ஈரான் படைகள் நிறுத்தப்பட்டிருந்த பல தளங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 23 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் 5 பேர் சிரிய அரசு படைகளை சேர்ந்தவர்கள் என்றும், 18 பேர் சிரியாவின் கூட்டணி நாடுகள், பெரும்பாலும் ஈரான் படைகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP