அமைதி பேச்சுவார்த்தை வேண்டாம்; ராஜினாமா செய்த இஸ்ரேல் அமைச்சர்!

பாலஸ்தீனதுக்கு சொந்தமான சிறிய பகுதியான காசாவின் தீவிரவாதிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு வந்த இஸ்ரேல் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 | 

அமைதி பேச்சுவார்த்தை வேண்டாம்; ராஜினாமா செய்த இஸ்ரேல் அமைச்சர்!

பாலஸ்தீனதுக்கு சொந்தமான சிறிய பகுதியான காசாவின் தீவிரவாதிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு வந்த இஸ்ரேல் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் சிறிய பகுதியான காசா, சுற்றிலும் இஸ்ரேல், எகிப்து எல்லைக்கு நடுவே அமைந்துள்ளது. ஹமாஸ் என்ற பாலத்தீன தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது காசா. அங்கிருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி காசா தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பலம்வாய்ந்த இஸ்ரேல் ராணுவம், தங்களது ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தை வைத்து, பெரும்பாலான ஹமாஸின் ஏவுகணைகளை தடுத்துவிடுவது வழக்கம். 

கடந்த ஞாயிறு அன்று, இஸ்ரேல் படைகள், காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஆதிக்க பகுதியில் ரகசிய ஆபரேஷன் ஒன்றை நடத்தினர். அப்போது அவர்களுடன் காசா தீவிரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். காசா தீவிரவாதிகள் 7 பேர் இதில் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவ கமேண்டோ ஒருவரும் இந்த தாக்குதலில் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த மூன்று தினங்களில், 460 ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலும் 400க்கும் மேற்பட்ட ராக்கெட்களை ஹமாஸ் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்ட நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதை, ஏற்றுக் கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் நிறுத்தத்தை அறிவித்தார். ஆனால் தீவிரவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி கொடுப்பதாக, பிரதமர் நெதன்யாகு மீது இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் அவிக்டோர் லீபர்மேன் குற்றம்சாட்டினார். இதனால் போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பெஞ்சமின் நேதன்யாகுவின் கூட்டணி அரசுக்கு, தனது கட்சி வழங்கி வரும் ஆதரவை உடனடியாக பின்வாங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP