Logo

சிரியாவில் ரசாயன தாக்குதல்: சர்வதேச குழு விசாரிக்க ரஷ்யா அனுமதி

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்
 | 

15-10-2019-newstm-dwstm-daily-astrology

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

15-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி - 28

செவ்வாய்கிழமை

 

துவிதியை மறு நாள் காலை 5.41 மணி வரை. பின்  திரிதியை

அசுபதி பகல் 1.27  மணி வரை பின் பரணி

சித்த யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: தைதுலம்

 

அகஸ்: 29.27

த்யாஜ்ஜியம்: 7.35

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 0.31

சூரிய உதயம்: 6.05


 

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30 

சூலம்: வடக்கு 

பரிகாரம்: பால் 

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரநாமாவளிகொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். 

குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

 

திதி:துவிதியை

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

சூரியன்

சித்திரை 2ம் பாதம் - பகை

சந்திரன்

மேஷம் - பகை

செவ்வாய்

ஹஸ்தம் 1ம் பாதம் - நட்பு

புதன்

சுவாதி 4ம் பாதம் - நட்பு

குரு

கேட்டை 4ம் பாதம் - பகை

சுக்ரன்

சுவாதி 2ம் பாதம் - ஆட்சி

சனி

பூராடம் 1ம் பாதம் - நட்பு

ராகு

திருவாதிரை 4ம் பாதம் - நட்பு

கேது

பூராடம் 2ம் பாதம் - நட்பு

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்

மேஷம்:
கிரகநிலை:
ராசியில் சந்திரன், தைரிய ஸ்தானத்தில் ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன்,  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எடுக்க ஆர்வம் காட்டுவீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்

ரிஷபம்:
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று பயணங்களால் நன்மை உண்டாகும். சந்திரன் ஆதாயத்தை தருவார். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம்  காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்

மிதுனம்:
கிரகநிலை:
ராசியில்  ராஹூ -   சுக ஸ்தானத்தில்  சூர்யன்,  செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்  -  ரண, ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது - லாப   ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்


கடகம்:
கிரகநிலை:
தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சூர்யன்,   செவ்வாய்  - சுக ஸ்தானத்தில்  புதன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது - தொழில் ஸ்தானத்தில்   சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகள் எதிர் காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்


சிம்மம்:
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில்  புதன்,  சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். தொழிலை விரிவுபடுத்த அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்

கன்னி:
கிரகநிலை:
ராசியில் சூர்யன்,   செவ்வாய்   - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன்,  சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். நன்மை ஏற்படும். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்

துலாம்:
கிரகநிலை:
ராசியில்   புதன்,  சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்

விருச்சிகம்:
கிரகநிலை:
ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில்  சந்திரன் -   அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு-  லாப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்

தனுசு:
கிரகநிலை:
ராசியில்  சனி , கேது -  பஞ்சம   ஸ்தானத்தில் சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில் ராஹு-   தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,  செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  புதன்,  சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது.  கவனத்தை சிதறவிடாமல்  உங்களது வேலைகளை சரிவர செய்வது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்

மகரம்:
கிரகநிலை:
சுக  ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய்  -  தொழில் ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.  உடல் ஆரோக்கியம் உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9    

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்

கும்பம்:
கிரகநிலை:
தைரிய, வீர்ய  ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்   ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன்,  சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது -    என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

15-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மனதில் உற்சாகம் உண்டாகும்


மீனம்:
கிரகநிலை:
 சுக ஸ்தானத்தில்   ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள்  மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP