சிரியாவில் குருதிப்புனல்... - சதியும் பின்னணியும்!

'சேவ் சிரியா' என ஹாஷ் டேக் கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தியாவிலேயே சிரியாவைப் பற்றி அதிகம் தேடிய, படித்த மக்கள் யார் என்றால் அது தமிழர்கள்தான் என்கிறது கூகுள். சிரியாவில் பிரச்னை இன்று, நேற்று அல்ல... பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சிரியாவின் பிரச்னைக்கு என்ன காரணம்... வளங்களும், தொன்மையும் கொண்ட நாட்டில் இவ்வளவு உயிர்கள் பலியாக காரணம் என்ன? Newstm ஸ்பெஷல் ஸ்டோரி உங்களுக்காக!
 | 

சிரியாவில் குருதிப்புனல்... - சதியும் பின்னணியும்!

சிரியாவில் குருதிப்புனல்... - சதியும் பின்னணியும்!

'சேவ் சிரியா' என ஹாஷ் டேக் கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தியாவிலேயே சிரியாவைப் பற்றி அதிகம் தேடிய, படித்த மக்கள் யார் என்றால் அது தமிழர்கள்தான் என்கிறது கூகுள். சிரியாவில் பிரச்னை இன்று, நேற்று அல்ல... பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சிரியாவின் பிரச்னைக்கு என்ன காரணம்... வளங்களும், தொன்மையும் கொண்ட நாட்டில் இவ்வளவு உயிர்கள் பலியாக காரணம் என்ன? Newstm ஸ்பெஷல் ஸ்டோரி உங்களுக்காக!

மத்தியதரைக் கடலின் கிழக்கில், மேற்கு ஆசியாவில் உள்ளது சிரியா. சுற்றிலும் லெபனான், துருக்கி, ஈராக், ஜோர்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது, தலைநகரம் டமாஸ்கஸ். பதின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய மனிதர்களால் குடிபெயரப்பட்ட பகுதி சிரியா என்கிறார்கள் ஆய்வாளர்கள். எகிப்திய, யூத, பைபிள் மற்றும் பாரசீக இலக்கியங்களில் 'அசிரிய' சாம்ராஜ்யமாக குறிப்பு பெற்றுள்ள வார்த்தையின் நாகரீக மறுவலே சிரியாவின் நாமகரணம்.

துருக்கிய ஓட்டோமன் ஆளுமையின் கீழ் இருந்த சிரியா முதலாம் உலக போருக்கு பின் பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் வந்தது, இந்நிலை 1945ல் சிரியா விடுதலை ஆகும் வரை தொடர்ந்தது. பிரெஞ்சு படைகள் 1946ல் தான் மூட்டை கட்டினார், அவர்களுக்கு பின் சிரியா நாடாளுமன்ற குடியரசாக வெகு சில வருடங்கள் இருந்தது. ஆனால் 1949 முதல் 1971 வரை மாறி மாறி ராணுவ ஆட்சியாளர்கள் ஒருவரை ஒருவர் தூக்கி வீசி ஆண்டனர். 1971இல் பாதுகாப்பு மந்திரியாக இருந்த ஹாஃபிஸ் அல்- ஆசாத் இதே போல் ஒரு புரட்சியில் ஆட்சியை பிடித்தார், அதன்பின் அவர் குடும்பமே நாட்டை ஆண்டு வந்திருக்கிறது. அரசியல்வாரிசாக தன் தம்பி ரிபஃத்தை, அறிவிக்க நினைத்தார் ஹாஃபிஸ், ஆனால் தம்பியோ ஹாஃபிஸ் உடல் நிலை சரி இல்லாத தருணத்தில் (1983-84) மீண்டும் புரட்சியில் ஆட்சியை கைப்பற்ற முயன்றார். ரிபஃத்தை நாடு கடத்தி விட்டு, தன் மூத்த மகன் பஸ்செல் தான் வாரிசு என முடிவு செய்தார். ஆனால் 1994ல் பஸ்செல் கார் விபத்தில் மரணமடைய, வெளிச்சத்திற்கு வந்தார் பஷர் அல்-ஆசாத். 2000ம் ஆண்டு தந்தையின் மறைவுக்கு பின் சிரியாவின் தலைவராக பதவி ஏற்றார், 'அலாவட்' ஷியா பிரிவை சேர்ந்த அவர் தற்போது வரை ஆட்சி செய்து வருகிறார்.

சிரியாவில் குருதிப்புனல்... - சதியும் பின்னணியும்!

இந்நூற்றாண்டின் தொடக்கம் வரை சுன்னிகள், ஷியாக்கள், குர்திகள், சலாஃபிகள், இஸ்மாய்லிக்கள் போன்ற இஸ்லாமியர்களோடு, கிறிஸ்தவர்களும், யூதர்களும் வாழும் பகுதியாகத்தான் இருந்தது சிரியா. 1.8 கோடி மக்கள் வசிக்கும் இந்நாட்டில் 87 சதவிகித மக்கள் இஸ்லாமியர்கள். இவர்களில் சன்னி அரபு இனத்தவர் 74 சதவிகிதம்,  ஆனால் அதிபர்  பஷர் அல் ஆசாத்தோ 13 சதவிகிதம் மட்டுமே உள்ள ஷியா பிரிவைச் சேர்ந்தவர். 2000ம் ஆண்டு, பின்னர் மீண்டும் 2007 மற்றும் 2014ல் எதிர்ப்பில்லாமல் தன்னை ஜனாதிபதியாக  ஸ்தாபித்து கொண்டார். 

1973ல் ஹாஃபிஸ் தலைமையில் எகிப்து மற்றும் முஸ்லீம் நாடுகளோடு சேர்ந்துக் கொண்டு இஸ்ரேல் மீது போர் தொடங்கி பெரும் தோல்வியை சந்தித்தது சிரியா. அந்த காலத்தில்தான் சோவியத் ரஷ்யாவுடன் புது நட்பு அரும்பியது. யூத - முஸ்லிம் சண்டையில், 'இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்காவின் எதிரி - ரஷ்யா என் நண்பன்' என நட்பு ஆழமாக வேர்விட்டும் வளர்ந்தது. ஷியாக்கள் அதிகம் வாழும் ஈரானும், ரஷ்யாவும் ஷியா ராஜ்யமான சிரியாவுக்கு தோள்  கொடுக்க, எதிர்காலத்தில் நடப்பவைக்கு விதை நடப்பட்டது.

சன்னி மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலத்தை ஷியா பிரிவைச் சேர்ந்தவர் ஆட்சி செய்வதா என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. இருந்தாலும், அனைவருக்கும் சம உரிமை கிடைத்த வரை, பெரும்பான்மையான மக்கள் அதை ஒரு பிரச்னையாகக் கருதவில்லை. ஆனால் ஹாஃபிஸின் காலத்தில் ஒரு கட்டத்தில் சன்னி மக்கள் புறக்கணிக்கப்பட்டு, ஷியா மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பு முதல் சலுகை வரை அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்பட்டதில் தொடங்கியது உள்நாட்டுப் பிரச்சனை. தந்தையை தொடர்ந்து பஷார் அல்-ஆசாத் பொறுப்பேற்றுக்கொண்டது சன்னிப் பிரிவு மக்களின் அதிருப்தி மேலும் அதிகரித்தது. 

ஆஸாத் முதலில் அரசியலில் ஆர்வம் கொண்டவராக இல்லை, நிஜத்தில் இவர் ஒரு கண் மருத்துவர். சிரியாவில் மாற்றத்தை விரும்பிய ஆசாத் சிரியா மக்களுக்குக் கருத்து உரிமையை அளித்தார், இது வெகு விரைவில் அவருக்கு எதிராகவே திரும்பியது.

சவுதி அரேபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் அனுப்பச் சிரியா வழியாகத்தான் சென்றாக வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆசாத் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். எப்படியும் அனுமதி பெற்றுவிடுவது என்று சவுதியும் ஐரோப்பிய நாடுகளும் பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், ஆசாத் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். இது, சிரியா மீது சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவின் கோபத்தை அதிகரித்தது. பின்னாளில் நாட்டைப் பிளவுபடுத்தும் கிளர்ச்சியாளர்களுக்கு அந்நாடுகள் ஆதரவு அளிக்க இதுவே காரணமாகவும் ஆனது.

2010ம் ஆண்டுச் அமெரிக்க ஆதரவுடன் 'அரேபிய ஸ்ப்ரிங்' ஆரம்பமானது: மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஆட்சி பொறுப் பிலிருப்போருக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்தனர் (அல்லது முடிக்கிவிடப்பட்டனர் என்றும் கூறலாம்). டுனீசியாவில் ஆரம்பித்து எகிப்து, பஹ்ரைன், லிபியா சிரியா, ஏமன் என பரவியது 'அரேபிய ஸ்ப்ரிங்'. துனுசியா மற்றும் எகிப்தில் ஆட்சியாளர்கள் பொறுப்பிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள், லிபியாவிலோ கடாஃபி கொல்லப்பட்டார். நேரம் பார்த்து காத்திருந்த சுன்னி முஸ்லீம் சவுதியும், வல்லரசுகளும் கிளர்ச்சியாளர்களை தூண்ட, ஷியா முஸ்லீம் ஈரானும், ரஷ்யாவும் ஆசாத்துக்கு நட்புக் கரம் நீட்டின. இதற்கிடையே சதாமின் மரணத்திற்கு பின் ஈரக்கிலும்,  கடாஃபியின் மரணத்திற்குப்பின்  சிரியாவிலும் வலுப்பெற்ற  சுன்னி முஸ்லீம் வஹாபி - சலாஃபி ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்தனர்; இது அகில உலக போலீஸ் அமெரிக்காவும் எதிர்ப்பார்க்காத ஒரு விஷயம்.

சிரியாவில் குருதிப்புனல்... - சதியும் பின்னணியும்!

பல லட்சம் அகதிகள் சிரியாவில் இருந்து புலம் பெயர்ந்து அகதிகளாக ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்தனர், இவர்களுடன் கணிசமான ஐ.எஸ் தீவிரவாதிகளும் ஐரோப்பாவில் புகுந்துள்ளதால் அங்கும் சில ஆண்டுகளில் தீவிரவாதம் தலைதூக்கும் என்ற போனஸ் வேறு. ஆனால் சுன்னி முஸ்லிம்களை தூண்டி விட்டு உதவியாக இருந்த சவுதியோ மற்றும் இன்னபிற முஸ்லீம் நாடுகளோ அகதிகளுக்கு தஞ்சம் கொடுக்காமல் வேடிக்கை பார்த்தனர், அவர்களுக்கு தெரியும் ஐ.எஸ் வீரிய விதை செடி என்று. மொத்தத்தில் ஷியாக்கள்,  சுன்னி முஸ்லீம்கள், வஹாபி ஐ எஸ் படைகள், துருக்கிய எல்லையில் கிளர்ச்சி செய்யும் குர்திகள், துருக்கிய ஆதரவு கிளர்ச்சி படைகள் என ஐந்து பிரிவுகள் சிரியாவை துண்டாடி போர் புரிந்து வருகின்றன.

இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து ரஷ்ய துணையோடு பெரும் பகுதிகளை மீட்டுள்ளனர் ஆசாத் தலைமையிலான சிரிய படைகள்.  தற்போது சுன்னி கிளர்ச்சி ராணுவம் வசம் உள்ள கிழக்கு டெமாஸ்கஸில் சண்டை நடைபெற்று வருகிறது, நன்கு பயிற்சி பெற்ற சுன்னி கிளர்ச்சிப் படையினர் ஆசாத்தின் அரசு படைகளுக்கு பெரும் சவாலாக உள்ளனர். கிளர்ச்சி படையினர் யுத்த தர்மத்தை மீறி மக்களிடையே நின்று தாக்குதல் நடத்துவதாலோ என்னவோ, சிரியா-ஈரான்-ரஷ்யா தரப்பும் தன் பங்கிற்கு யுத்த தர்மத்தை காற்றில் கலக்க விட்டு சிவிலியன் குடியிருப்பு பகுதிகளிலும் குண்டு மழை பொழிகின்றனர். இரண்டு படைகளும் முஸ்லீம் படைகள் என்றாலும் கொத்து கொத்தாக வீழ்வதென்னவோ அமைதி மார்கத்தில் சிக்குண்ட அப்பாவி மக்களின் குழந்தைகள்தான்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP